Posts

ரோஜா நிறத்தில் இரத்தத் திட்டுகள் - அத்தியாயம் 5

 அத்தியாயம் 5 ஜானகியின் சத்தத்தில் கைகளை உதறி நிமிர்ந்தவன் அவள் முகம் காண்கையில் மீண்டும் மின் இணைப்பு வர அவன் ஒரு வான்கோழியை வெட்டி சமைக்க சுத்தம் செய்துக் கொண்டு இருந்தான். அவளது பயம் படவிய விழிகள் மெல்ல இயல்புக்கு வர அவனை ஏன் மீண்டும் மீண்டும் தவறாக நினைக்கும் படியே சூழ்நிலைகள் அமைகிறது அவள் பெருமூச்சு விட்டு தன் தவறான கற்பனைக்கு மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னாள். “சாரி .. மிஸ்டர்..” ஜானகிக்கு குற்ற உணர்வாக இருந்தது இரு நாட்கள் அவனது வீட்டில் தங்கி அவனால் உயிர் காப்பாற்றப்பட்டு அவனைச் சந்தேகமேப் பட்டு போதாக் குறைக்கு அவன் பெயரைக் கூட அறியாது இருக்கிறோம்.. “ஆதித்ய கரிகாலன் ..” அவன் குரலில் அந்த பெயரைக் கேட்டதும் லேசாக அதிர்ந்தது இதுவரை கேட்டிராத அவன் குரலினாலா அந்த பெயரினாலா இல்லை அந்த இரவின் இரத்தம் தோய்ந்த விரல்கள் தந்த நடுக்கத்தினாலா என்பதை அவள் உணராது குழம்பினாள். “அல்லி ..அல்லி ..இருக்காளா னு..பார்த்து .வான்கோழி வந்து …பயந்து …” சம்மந்தமே இல்லாது பேசும் டைம் அடிக்கும் குரலில் அவள் பேச அவள் பேச்சு அவளுக்கே வேறு ஒரு சமயம் என்றால் சிரிப்பை வரவழைத்திருக்கும். அவன் ஒன்றும் பேசாது

ரோஜா நிறத்தில் இரத்தத் திட்டுகள் - அத்தியாயம் 4

 அத்தியாயம் 4 ஜானகியின் அச்சத்தை அவளது பளிங்கு முகம் அப்படியே வெளிப்படுத்த அதை அந்த புதியவனின் விழிகள் ஒரு வித களிப்புடன் இரசித்துக் கொண்டு இருந்தது. ஜானகி மனதில் கற்பனை குதிரைத் தாறுமாறாக ஓட அவன் சட்டென்று ஒரு கத்தியை எடுத்து கூர் தீட்டும் காட்சி விரிய க்ரீச் எனும் ஒலி பின்னிருந்து கேட்க அவள் வாய் திறந்து கத்தும் முன் அல்லி குரல் கேட்டது. “ஐயா ..இவுங்க எங்க ஆபிஸ் ல இருந்து வந்தாங்க ..நீங்க இருக்கிறது தெரியாம உள்ள வந்துட்டாங்க “ அவள் குரலில் அநியாயத்திற்கு பணிவு இருந்தது.தான் சற்று முன் கேட்ட க்ரீச் ஒலி கேட் சத்தம் என்பதை ஊகித்தவள் வாய் மூடி மௌனமாக இருக்க அல்லி தொடர்ந்தாள். “ ஏங்க இருட்டாகப் போகுது.. ..இப்ப எங்க ஊர் சகாயண்ணன் பொருள் வாங்க ஊட்டி போறார்..அவர் பின்னாடியே போனீங்க னா பாதுகாப்பா போயிடலாம்” அல்லியின் சொற்கள் அவள் மனதில் பெரும் நிம்மதியைப் படரச் செய்ய அது அவள் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது.ஜானகியின் முகத்தில் பரவிய நிம்மதியைக் கண்ட அந்த புதியவனின் இதழ்கள் ஒரு நொடி புன்னகையைச் சிந்தி பின் அது கற்பனையோ என நினைக்கும் அளவுக்கு சட்டென்று மறைந்து போனது. ஜானகி அடித்தோம் பிடித்தோ

ரோஜா நிறத்தில் இரத்தத் திட்டுகள் - அத்தியாயம் 3

 அத்தியாயம் 3 ஜானகி சில்லென்று அடிக்கும் அந்த வெளிக்காற்றைச் சுவாதித்தப்படி தன் தந்தையிடம் பேச்சுக் கொடுத்தாள். “அப்பா ..வீக் என்ட் பாட்டி வீட்டிற்கு வந்துடுவீங்க ல” “வந்துடுவேன் டா ..” “நேர நேரத்திற்கு சாப்பிடுங்க..ஆத்தாக்கு ஃபோன் பண்ணி சொல்லிடறேன்” அவள் தொணதொணப் பேச்சை ரசித்துக் கொண்டே தன் வீடு வந்தார். ஊட்டி நகரத்தின் அழகான தேயிலை பயிர் செய்யும் இடத்தின் நடுவே அந்த பெரிய வீடு அமைந்திருந்தது.சுற்றிலும் மலர்செடிகள் சிறு மரங்கள் சூழ்ந்திருக்க அந்த வீடு அவ்வளவு அழகாக இருந்தது.ஜானகியின் பாட்டி வீடு அவள் சிறுவயது விடுமுறை நாட்களின் சொர்க்கப் பூமி.சுற்றிலும் அந்த குளிர் சீதோஷ்ண நிலை மலர்கள் செடிகள் எனப் பார்த்து வளர்ந்தவளுக்கு இயற்க்கையாகவே செடிகொடிகள் மீது காதல் பிறந்து பின் அதையே தன் படிப்பாகத் தேர்வு செய்யும் அளவுக்கு அந்த தாக்கம் இருந்தது. ஜானகி உள்நுழைந்ததும் அவளது பாட்டி லட்சுமி அவளை கட்டிப்பிடித்து வரவேற்றாள். “ஜானு …என் தங்கம் …எத்தனை நாள் ஆச்சு பார்த்து..உங்க அப்பன் மனசு வந்து கூட்டிட்டு வந்துட்டானா?” “அப்பாச்சி..இனி ஆறு மாசத்துக்கு இங்க தான் ..தீஸிஸ் முடிக்கனும்..பசிக்குது அப்பா

ரோஜா நிறத்தில் இரத்தத் திட்டுகள் - அத்தியாயம் 2

 அத்தியாயம் 2 ஜானகி திடுக்கிட்டு அந்த மலர்களை நோக்கிக் கொண்டு இருக்க அவளது கவனத்தை கலைத்தது பின்னிருந்து வந்த ஹாரன் ஒலி.மேட்டுப்பாளையம் செல்லும் நகரப் பேருந்து நிற்க ஒரு நொடி கூட தாமதியாது ஓடிப் போய் அந்த பேருந்தினுள் ஏறிக் கொள்ள அந்த கறுப்பு நிற கார் மெல்ல அந்த பேருந்துக்கு வழி விட்டு நகர்ந்தது. ஜானகியின் இதயம் இன்னும் தாறுமாறாக துடிக்கத் தொடங்கியது.அவன் முகம் தெரியவில்லை ஆனால் பயத்தில் இதயம் நின்று நின்று துடித்தது.பேய் படங்கள் ஹாரர் படங்களில் நடப்பதெல்லாம் நிஜத்தில் நடந்தால் அதுவும் தனக்கே தனக்கு என்று நடந்தால் என்ன தான் ஆகும்..அவள் பதட்டத்தை மேலும் அதிகரிக்க அவள் அருகே ஒரு உருவம் வந்து நிற்க மீண்டும் அவள் உடல் அச்சத்தில் தூக்கி வாரிப் போட்டது. “ஏம்மா …எங்க மா போகனும்” “***** ஸ்டாப்பிங் ஒரு டிக்கெட்” அவள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைத் துழாவ நடத்துநர் கட்டணமில்லா பயணச் சீட்டை அவள் கையில் திணித்து விட்டு நகர அவள் பெருமூச்செறிந்தாள். அந்த சீட்டை வாங்கியப் பின்னும் விரல்களின் நடுக்கம் இன்னும் குறையாதிருக்க மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.அந்த கார் வருகிறதா பின்னே என்று பார்த்தவள் அது வருவதற

ரோஜா நிறத்தில் இரத்தத் திட்டுகள் - அத்தியாயம் 1

 ரோஜா நிறத்தில் இரத்தத் திட்டுகள் நிலா பிரகாஷ் அத்தியாயம் 1 அடர்ந்த மரங்களுக்கு இடையில் அமைந்திருந்த அந்த மரத்திலான வீட்டின் உள்ளே சத்தம் செய்யாது ஒரு உருவம் தன் கையில் இருந்த அந்த பையைக் கீழிறக்கியது.நடுநிசி நிசப்தத்தை பூச்சிகளும் மிருகங்களும் தங்கள் சத்தங்களால் பீறிட ஒரு வித அனுமானுஷ்யம் அந்த இடம் முழுவதும் பரவி நின்றது. மலைப் பிரதேச பகுதிகளில் இவ்வளவு அடர்ந்த காட்டின் நடுவே இயற்கையை ரசிக்கவோ இல்லை இருளின் குரூரத்தை அருகில் இருந்து ருசிக்கவோ அந்த வீடு கட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த பையில் வழிந்த குருதியின் ஈரம் ஒவ்வொருத் துளிகளாகச் சொட்டி சொட்டிக் காய்திருந்த இரத்தத் திட்டுகள் அந்த உருவத்தின் கையில் இருந்த டார்ச் அடர்சிவப்பில் மிளிர்ந்தது.அந்த உருவம் தன் முகத்தையும் உடலையும் மூடியிருந்த கருப்பு ரெயின் கோட்டை அகற்றி விளக்கை ஒளிரச் செய்ய அவன் தெரிந்தான்.அவன் முகம் ஒரு வெள்ளை முகமூடியால் மூடப்பட்டிருந்தது .அவன் கொண்டு வந்து கீழ் வைத்த பையில் இருந்து முனகல் சத்தமும் அசைவும் கேட்டுக் கொண்டே இருந்தது. அதைப் பொருட்படுத்தாது அவன் அந்த மர வீட்டின் இன்னொரு அறைக்குச் சென்று வெள்ளை உடை